ஊவ பரணகம பிரதேச செயலகத்திற்கு வருவது எவ்வாறு?
- வௌிமடை நகரிலிருந்து உடபுஸ்ஸெல்லாவ பாதையினுடாக லுனுவத்த நகரை தாண்டி சிறி மீட்டர் சென்ற பின் முன்னால் இடது பக்கம் காணப்படும். வௌிமடை நகரிலிருந்து உடபுஸ்ஸெல்லாவ, மஸ்பென்ன, பண்ணலவெல, மெதிபொக்குன, மஹகும்புர, போக்கடுதன்ன, ரத்னோத்தாகம ஆகிய பேருந்துகளில் செல்ல முடியும்.
கிராம உத்தியோகத்தர் பிரிவு இலக்கம் தொடர்பான தகவல்கள்
- இந்த பிரதேச செயலாளர் பிரிவில் 68 கிராம உத்திகேத்தர் பிரிவுகள் உள்ளன.
-
தொ.இல
கிராம சேவக இல
கிராம சேவக பிாிவு
01
37
மஸ்பன்ன
02
37 F
வேதலாவ
03
37 B
கிதிகொட
04
37 C
கொஹிலேகம
05
37 D
எல்லந்த
06
37 E
யாலகமுவ
07
37 F
ரிடிகும்புர
08
38
வெவேகம
09
38 A
திம்புலன
10
38 B
ஹத்கிந்த
11
38 C
கம்பஹ
12
38 D
இலுக்வெல
13
38 E
கேக்லீஸ்
14
39
பம்பரபான
15
39 A
மல்வத்தேகம
16
39 B
மெதிபொகுன
17
39 C
பிடியகும்புர
18
40
துப்பிட்டிய
19
40 A
பனாகொட
20
41
கிரவணாகம
21
41 A
பண்ணலவெல
22
41 B
லூணூவத்த
23
41C
உணபான
24
41 D
ராஹூபொல
25
41 E
பெரலியபொல
26
42
சபுகொல்ல
27
42 A
எத்கந்தவக
28
42 B
எலகொல்ல
29
43
பரணகம
30
43 A
தவலம்பொல
31
43 B
ஹங்குண்நாவ
32
43 C
இடமேகம
33
43 D
மூதனாவ
34
43 E
ரண்ஹவடிகம
35
43 F
கொடகும்புர
36
43 G
வோல்டிமாா்
37
44
உடுஹாவர
38
44 A
மலபொலகம
39
44 B
வெலமெதகம
40
44 C
கொரந்தேகும்புர
41
45
குமாரபட்டிய
42
45 A
புஸ்துல்ல
43
45 B
பலகல
44
45 C
குருந்துகொல்ல
45
45 D
பல்லேவெல
46
46
பேரவெல்ல
47
46 A
மெதவெல
48
46 B
கலஹாகம
49
46 C
கரகஹ உல்பத
50
46 D
மெதகொடகம
51
46 E
தெல்ஹாவடிகம
52
47
உமாஎல
53
47 A
அம்பகஸ்தோவ
54
47 B
தன்கமுவ
55
47 C
ரத்தம்ப
56
47 D
தரகட
57
47 E
கெடகொட
58
47 F
பண்ணலாகம
59
53
மெடிவலலந்த
60
53 A
ஹாங்கிலிஎல்ல
61
53 B
உலுகல
62
53 C
யஹல அராவ
63
53 D
கெந்தகொல்ல
64
53 E
கொடவெர உடகம
65
53 F
கொடவெர பஹலகம
66
53 G
டவ்ன்சைட்
67
54
உடபேருவ
68
54 A
வெலிஉள்ள
காரியாலய பிரிவு
வியாபாரம் ஒன்றை பதிவு செய்யும் போது உரிமையாளரே வர வேண்டுமா?
- இதற்காக உரிமையாளர்' கட்டாயம் வர வேண்டியதுடன் தேசிய அடையாள அட்டை கொண்டு வருவது அவசியமாகும்
மரணித்த ஒருவரின் வங்கி கணக்கிலுள்ள பணம் மற்றும் அடகு செய்யப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பாக கொண்டுவரவேண்டிய ஆவணங்கள் எவை?
- மரணித்தவரின் மரண சான்றிதழ்.
- விண்ணப்பதாரிக்கு உள்ள உறவுமுறைக்கான சான்று (பிறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ்).
- வேறு நபர்கள் இருப்பார்களாயின் விண்ணப்பதாரி பணம் மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஆட்சேபனை இல்லை என சத்திய பிரமாணம்.
- தேசிய அடையாள அட்டை.
சமூக சேவைகள் பிரிவு
கர்ப்பிணி தாய்மாருக்கு வழங்கப்படும் 20000.00 ரூபா பெறுமதியான போசாக்கு கொடுப்பணவை பெற்றுக்கொள்வது எவ்வாறு?
- கர்ப்பம் அடைந்து 3 மாதங்களுக்குள் செல்லும் வைத்திய நிலையம் அமைந்திருக்கும் பிரதேச செயலகத்தின் குழந்தைகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் அல்லது வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தரிடம் இவ்விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
கல்விக்கொடைகளை பெற்றுக்கொள்வது எவ்வாறு?
- பிள்ளையின் தந்தை மரணமடைந்தோ அல்லது சுகப்படுத்த முடியாத நோயிலிருந்தாலோ பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கல்விக்கொடைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அரசு அல்லாத நிறுவனம் ஒன்றை பதிவு செய்வது எவ்வாறு?
- அரசு அல்லாத நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு பின் ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் பதிவு செய்யப்படும்.
புதிதாக சமுர்தி கொடுப்பணவு பெற்றுக்கொள்ள முடியுமா?
- தற்போது புதிதாக பயனாளிகள் தெரிவு செய்யப்படமாட்டார்கள், வரும் காலத்தில் கருத்தில் கொள்வதற்காக பெற்றுக்கொள்ளப்படும்.
மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு
பிறப்பு , இறப்பு மற்றும் மரண சான்றிதழ் பிரதிகளை பெற்றுக்கொள்வது எவ்வாறு?
- பிறப்பு , இறப்பு மற்றும் மரண சான்றிதழின் இலக்கம் தெரிந்திருப்பின் 100 ரூபாயும்
- பிறப்பு , இறப்பு மற்றும் மரண சான்றிதழின் இலக்கம் தெரியாதிருப்பின் 200 ரூபாயும் பிரதேச செயலகத்திற்கு செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
- பதுளை மாவட்டத்தில் நடைபெற்ற பிறப்பு , இறப்பு மற்றும் மரணமாக இருப்பின் மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
பிறப்பு ஒன்றை பதிவு செய்வது எவ்வாறு?
- சாதாரன பிறப்பாக இருப்பின் பிறந்து 3 மாதங்களுக்குள் உரிய பிரதேசத்தில் பிறப்பை பதிவு செய்யும் பதிவாளர் ஒருவரிடம் பதிவு செய்ய வேண்டும்.
- பிறப்பு நடைபெற்று 03 மாதங்கள் பிந்தியிருந்தால் மேலதிக மாவட்ட செயலாளரை சந்தித்து தேவையான தகவல்களை பெற முடியும்.
ஓய்வூதிய பிரிவு
சிவில் ஓய்வூதியர் மரணமடைந்தால் விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியம் செய்துக்கொள்வது எவ்வாறு
- முதலில் ஓய்வூதியரின் மரண சான்றிதழை பெற்றுக்கொண்டு ஓய்வூதியத்தை நிறுத்துதல்.
- கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்பட்டிருக்குமாயின் அதை மீள பெறுவதற்கு வங்கிக்கு கடிதம் அனுப்புதல்.
- பிறகு குறித்த நபருக்கு பின்வரும் ஆவணங்களை கொண்டுவர கூறுதல்.
- ஓய்வூதியரின் மரண சான்றிதழின் மூலப்பிரதி.
- கணவன் அல்லது மனைவியின் பிறப்பு சான்றிதழின் மூலப்பிரதி
- திருமண சான்றிதழின் மூலப்பிரதி
- கணவன் அல்லது மனைவியின் வங்கி புத்தகத்தின் பிரதி
- கணவன் அல்லது மனைவியின் அடையாள அட்டை பிரதி
- விதவைகள் அநாதைகள் அட்டையினி பிரதி அல்லது விதவைகள் அநாதைகள் இலக்கம்.
- கிராம உத்தியோகத்தரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டு பிரமாண நிற புகைப்படம்.
- மேற்குறிப்பிட்ட அனைத்து பிரதிகளையும் கிராம உத்தியோகத்தர் அத்தாட்சிப்படுத்த வேண்டும்.
- பிறகு எல்லா தகவல்களும் கிடைத்த பின் கோவையை விதவைகள் அநாதைகள் ஓய்வூதியம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓய்வூதியரின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டிருப்பது ஏன்?
- குறித்த வருடத்திற்கான உயிர் வாழ்வதற்கான சான்றிதழ் இல்லாமல் இருப்பின்.
- ஓய்வூதியர் இருப்பாராயின் உயிர் வாழ்வதற்கான சான்றிதழ் வழங்கி கிராம உத்தியோகத்தரால் சான்றுப்படுத்தி கொண்டுவர கூறுதல்.
- உயிர் வாழ்வதற்கான சான்றிதழ் கிடைத்த பின் மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்படும்.















